மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வருணகம பிரதேசத்தில், மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தலஆராகம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வருணகம பிரதேசத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்று தெரிய வருகின்றது.
மின்சார தாக்கத்துக்கு உள்ளான நபரை, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment