நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரம் தெரிவிக்கின்றது.
அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் பிரசாத் ரணவீர, கூறுகையில்,
கடந்த வருடம் முதல் தற்போது வரை, நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் “2021 முதல் 2022 ஆம் ஆண்டுவரை 14 வயதுக்கு குறைவான சுமார் 250 குழந்தைகள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிகரித்து வரும் தொழுநோயாளிகளைக் கண்டறிந்து முறையான வைத்தியத்தை வழங்க வேண்டும் மேலும் மக்களுக்கும் இந் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் தோலை விட குறைந்த நிறமுடைய ஒரு புள்ளி உங்களிடம் இருந்தால், இது முதன்மை அறிகுறியாகும். தொழுநோய், அல்லது அந்த புள்ளிகளில் உணர்வின்மை அல்லது கைகால்களில் உணர்வின்மை இருந்தால், அருகில் உள்ள தோல் மருத்துவ மனைக்குச் செல்லவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment