விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜையொருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று முன்தினம்(13) கைதுசெய்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில், ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபரொருவர் விசா இன்றி தங்கியிருந்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment