அரச அச்சகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதில் காணப்படும் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதிலும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அச்சக தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதி நுவான் புத்திக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேவிடம் வினவிய போது, ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளருடன் இன்று(23) கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அரச அச்சகர் கூறினார்.
No comments:
Post a Comment