நாட்டில் இன்று அதி அவதானத்துக்குறிய துறையாக சுகாதாரத்துறை மாறியுள்ளதாக மருத்துவர்களின் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலேயே அதிகம் பேசப்படுகின்றது.
சுகாதாரத்துறை என்பது இன்று அவதானத்துக்குறிய துறையாக மாறியுள்ளது.
மருந்துகளுக்கான தட்டுப்பாடு என்பது இன்று பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மருந்த தட்டுப்பாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரிகள் அசமந்தமடைந்துள்ளனர்.
அதேபோன்று மருந்துப்பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றது.
சிறுவர்கள்இ கர்ப்பிணிகள்இ பாலூட்டும் தாய்மார்கள் எதிர்கொண்டுள்ள போசணை குறைபாட்டு பிரச்சினை என இவ்வாறான பல பிரச்சினைகளால் சுகாதாரத்துறை என்பது இன்று பாரிய சவாலுக்குரிய துறையாக மாறியுள்ளது.
சகல சுகாதார பிரிவுகளிலும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் மந்தபோசணை நிலைமை தொடர்பலான முழுமையான புள்ளிவிவரத் தகவலை பெற்றுத்தருமாறும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாம் கோரியுள்ளோம்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நூற்றுக்கு 21 சதவீதமாகக் காணப்பட்ட மந்தபோசணை நிலைமையானது தற்போது 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனினும் சுகாதார அமைச்சின் தகவலின்படி நூற்றுக்கு 15 சதவீதமே மந்தபோசணை பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகின்றது.
குடும்ப சுகதார நல பிரவு மட்டத்தில் எடுத்துக்கொண்டால் ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களின் நிறையில் பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பிலான உண்மையான தகவலை பெற்றுக்கொள்ளுவதில் இழுபறி நிலைமையே காணப்படுகின்றது.
சுகாத்துறையின் செயலிழப்பு காரணமானவர்களுக்கு வெகுவிரைவில் நாம் பாடம் புகட்டுவோம்.
No comments:
Post a Comment