நுவரெலியா, நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போட்ரி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment