சிறிதம்ம தேரருக்கு பிணை: வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்!! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

சிறிதம்ம தேரருக்கு பிணை: வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 


பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த, சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே கடந்த 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் டீ.என்.எல். மஹவத்த முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். 


அதன்போது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெறும் வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இந்த நிலையில், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில் சிறிதம்ம தேரருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


பிணை நிபந்தனைகள் பூர்த்தியானதன் பின்னர் அவர் விடுவிக்கப்படவுள்ளார். சிறிதம்ம தேரர் சார்பில் சட்டத்தரணி பஸீர் மொஹமட் முன்னிலையாகியிருந்தார். 


எவ்வாறாயினும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறும் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here