பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீன்பிடி கப்பலில் இருந்து, மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
தாலாவிட்ட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த மீனவர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி’ஹிருன் புதா 2 என்ற பல்நாள் மீன்ப்பிடி கப்பலில் மேலும் ஐந்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த மீனவர் மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்று மாலை கடலில் விழுந்ததாக, படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment