மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டு இருந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ட்ரீம் ஸ்பேஸ் அகடெமியை பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வில் ட்ரீம் ஸ்பேஸ் அக்கடெமியின் புத்தாக்க ரீதியான கற்றல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இற்கு ட்ரீம் ஸ்பேஸ் அகடெமியின் இணை நிறுவுனர் கிஷேhத் நவரெட்ணராஜா விளக்கமளித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவிச்செயற்திட்டத்தின் கீழ் குளோபல் கம்யூனிட்டிஸ் ஊடாக செயற்படுத்தப்படும் விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கலைத்துறைகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான துறை சார்ந்த வல்லுனர்களை உருவாக்கும் 12 மாதகால செயற்றிட்ட செயற்பாடுகளையும் அதில் அவர்கள் பயிற்றுவிக்கப்படவிருக்கும் முறைமைகளையும் பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வில் குளோபல் கமியூனிட்ஸ் உடைய இலங்கைக்கான பிரதானி ஜெயதேவன் கார்த்திகேயன், பிராந்திய முகாமையாளர் சத்துரிக்கா செனவிரத்ன, திட்ட மேம்பாட்டு நிபுணர் நௌசாத் மொஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கருத்து தெரிவிக்கையில்,
‘நீங்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தோடும், உயர்ந்த குறிக்கோள்களோடும் இவ்வாறான விடயங்களை செய்கின்றீர்கள். தொடர்ந்தும் இவ்வாறான சமூகத்திற்கும் உலகத்திற்கும் நன்மை தரக்கூடிய பல விடயங்களை செய்ய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்’ எனவும் ‘ட்ரீம் ஸ்பேஸ் எக்கடமி’இல் பல பெண்கள் ஆர்வத்தோடு வேலை செய்கின்றீர்கள்.
இவ்வாறே ஆண், பெண் என்ற பாலின வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி, ஒன்றாக வேலை செய்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள் எனவும் தெரிவித்தார்.
ட்ரீம் ஸ்பேஸ் அகடெமி என்பது ஒரு இலாப நோக்கற்ற சமூக நிறுவனமாகும், இது சவால் அடிப்படையிலான கற்றல், புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் வணிக அமைப்புகளை வடிவமைத்தல் ஆகியவற்றின் மூலம் சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கான தீர்வினை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தும் அமைப்பாகும்.
No comments:
Post a Comment