ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை பாதுகாப்பதைத் தவிர ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை ஒருபோதும் பாதுகாக்க போவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க பிமேரச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் சீன தூதரகத்துக்கு முன்பாக சென்று மஹிந்த ராஜபக்ஷவினருக்கு வழங்கிய கடனை ஏன் மறுசீரமைக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரணில் ராஜபக்ஷ மஹிந்த ராபக்ஷவினரை பாதுகாப்பதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. கடனை மறுசீரமைப்பு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி இருந்தார்.
இதனூடாக பாரிய பொய்யையே நாட்டு மக்களுக்கு கூறினார்.
ரணில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஒரு கருத்தை கூறும்போது மறு புறத்தில், சீன தூதரகத்துக்கு முன்பாக சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
உண்மையில் இங்கு என்ன நடக்கின்றது என்றே கேட்க விளைகின்றோம்.
சீன தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது சீன அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடாகவே கருதப்படும்.
அவ்வாறான எதிர்ப்பை நாட்டின் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்களே முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியன் உறுப்பினர் கட்சியில் ஒருவருக்கும் அறிவிக்காமலேயே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவர்களுக்கு இறுதியில் இந்த நிலைமையே ஏற்படும்.
No comments:
Post a Comment