ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒரு போதும் அரசியல் உறவைப் புதுப்பித்துக் கொள்ளப் போவதில்லை என டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதநதிர மக்கள் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய பாராளுமன்றம், மக்கள் எதிர்பார்ப்பைப் பிரதிபதிக்கவில்லை.
எனவே, புதிய மாற்றமொன்றை மக்கள் வலியுறுத்துகின்றனர். புதியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். மக்களின் மனநிலை என்னவென்பதை அறிவதற்குக் குறைந்தபட்சம் உள்ளூராட்சி சபைத் தேர்தலாவது நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும். தேர்தல் நடைபெற்றால் நாம் வெற்றி பெறுவோம். வெல்லும் அணியில் நாம் பிரதான பங்காளியாக இருப்போம். ‘மொட்டு’க் கட்சியுடன் இனி அரசியல் உறவு இல்லை. தேர்தலில் அவர்களுடன் போட்டியிடவும் மாட்டோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment