அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக அரச காணிகளில் விவசாயம் மற்றும் குடியிருந்து வரும் 20 குடும்பங்களுக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் லோஜினி கோகுலனின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று இருந்தன.
திருக்கோவில் பிரதேசத்தில் அரச காணிகளில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான காணி அளிப்புக்களை வழங்கும் நோக்குடன் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்களின் முயற்சியின் ஊடாக காணிப் உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கைகள் காரணமாக இக்காணி அளிப்புக்கள் பிரதேசத்தில் தொடர்தேர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று 20 குடும்பங்களுக்கு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கி வைத்திருந்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா சிரேஷ்ட முகாமைத்து சேவை உத்தியோகதத்ர் ஏ.சசிந்திரன் காணிப் பிரிவு உத்தியோகத்தரகள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காணி அளிப்புக்களை வழங்கி வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment