தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் நீருக்கடியில் 24.8 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment