கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடலட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடலட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு

 கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடற் பகுதியில் பாராம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் 45 ஆவது நாளாகவும் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். 


கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இலவங் குடா கடற்பரப்பில் தங்களுடைய பாரம்பரிய தொழில்களை மேற்கொள்வதற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத அட்டைப் பண்ணைகளை அகற்றி தாம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வழி வகைகளை செய்து தருமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இரண்டு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தை முன்னெடுத்த கடற்தொழிலாளர்கள் பலதன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளையடுத்து குறித்த போராட்டத்தை கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர். 


இந்நிலையில் 45 வது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை ஒரு வார காலத்துக்குள் அகற்றித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


எனினும் இதுவரை அட்டைப்பண்ணைகளை அகற்றித் தரவில்லை எனவும் அட்டைப் பண்ணைகளை அகற்றி தமது தொழில் நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்து தரும் வரை தொடர்ந்தும் தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here