சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கிராமப்புற மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கவனம் செலுத்தி வருகின்றது.
அந்தவகையில் மருதமுனையில் கிராமிய ஆயூர்வேத வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான விடுதி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஏ.ஆர்.ஏ.ஹாபில் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை பணிப்பாளர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதிப்பணிப்பாளர் டவுல்யு.எச்.எம். வாஹித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சி.;எம்.மாஹீர், கல்முனை மாநகரசபை முதல்வர் ஏ.எம்.ஏ.றக்கீப், வைத்தியர்கள், தாதியர்கள். ஆயூர்வேத பாதுகாப்புச் சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment