சமூக ஊடகங்கள் தொடர்பில் 12 ஆயிரத்து 373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்தக முறைப்பாடுகள் தொடர்பான கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பில் 16 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், ஸ்கேம் எனப்படும் மோசடி முறைமை தொடர்பில் 468 முறைப்பாடுகளும், துஷ்பிரயோகங்கள் குறித்து 757 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு 24 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், இரண்டு மாதங்களில் பெரும்பாலும் கடந்த ஆண்டை விட அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பயனாளர்கள் தங்களது கணக்கையும் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டுள்ள முறைமைகளை உரிய வகையில் பயன்படுத்தாமையே இதற்கு காரணமாகும்.
க்ரிப்டோ கரன்ஸி எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாடு முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக மென்பொருள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இது போன்ற முறைமைகள் தொடர்பில் சமூக ஊடக பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளளார்.
No comments:
Post a Comment