பாண் விற்கும் வாகனம் மீதும் விற்பனையாளர் மீதும் மர்மநபர்கள் தாக்குதல்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திகள் சுழிபுரம் பகுதிக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமை.
இந்நிலையில் வழமை போல நேற்றையதினம் பாண் விற்பனைக்கு வந்த வாகனம் மீதும் வாகன சாரதியும் விற்பனையாளருமான இளைஞன் மீதும், முகத்திற்கு கறுப்பு துணி கட்டிவந்த மர்மநபர்கள் மூவர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த சிலர் குறித்த பாண் விற்பனையாளரிடம் கடனாக பாண் கேட்டுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment