கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் பங்கேற்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 24 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மதுபானம் அருந்திய நிலையில், ஹோட்டலிலிருந்த நீச்சல் தடாகத்தில் நீராடியுள்ளார் என்றும் இதன்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment