இந்தியா தமிழகம் இராமநாதபுரம் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தனித்துணை ஆட்சியாளர், அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி முகாமில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று தனித்துணை ஆட்சியர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசலில் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் கைக் குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment