அறிஞர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்புவதில் பயனில்லை. மக்கள் பணியாற்றக்கூடிய தலைச்சிறந்த கல்வியலாளர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்று அரசியல் செயற்பாட்டாளர் சிராஸ் யூனஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் அரசியல் சூழலை பொறுத்தவரையில் தெரிவு என்ற ஒரு விடயத்துக்கு பழக்கப்பட்டவர்கள் நாம்
தெரிவு என்ற விடயத்தில், சிந்தனைக்கு பதிலாக முகதாட்சனைக்கு முக்கியத்துவமளித்து செய்படும் தரப்பினராக நாம் உள்ளோம்.
சில வேளைகளில் ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் கூட இந்த தெரிவு விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணியாக உள்ளது.
எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சந்தேகம் என்பவற்றைய அடிப்படையாகக் கொண்டு தெரிவு என்ற விடயத்தில் தவறிழைக்கின்றோம்.
எமது ஜனாதிபதிகூட பாராளுமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 134 பேரின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு என்று பார்த்தால் இது நியாமயான விடயம். இது தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இதில் மக்கள் ஆணை பிரதிபலித்ததா?
இந்த இடத்தில் நான் ஜனாபதியை குற்றச்சாட்ட விரும்பவில்லை. எனினும் தம்மை பாதுகாக்கக்டிய ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டிய தேவை ராஜபக்ஷ தரப்பினருக்கு இருந்தது.
தற்போதைய சூழலில் எமது சிறுவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.
தெரிவு என்ற விடயத்தில் நாட்டு மக்கள், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செற்பட வேண்டியது அவசியம்.
தலைச்சிறந்த கல்விமான்களை, மக்களுக்காக பணியாற்றக்கூடிய தரப்பினரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment