அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்திய தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி நிவாரண உதவிகள் திருக்கோவில் 04 கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரனின் தலைமையில் திருக்கோவில் 04 கிராமத்தில் இடம்பெற்று இருந்தன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு இவ் நிவாரண உதவிகள் கையளிக்கப்பட்டு இருந்தன.
இவ் நிவாரணப் உதவிகளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சசிந்திரன் கிராம சேவை உத்தியோகத்தர் என பலரும் கலநது கொண்டு பயனாளிகளுக்கு நிராவண உதவிகளை வழங்கி வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment