யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சுமார் 555 இலட்சம் ரூபாவுக்கு, இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டதுடன், காரைநகரின் 6 வட்டாரங்களுக்கும், அபிவிருத்திக்கான நிதி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், வருமானங்களை அதிகரிப்பதற்கான மூலோபயங்களும் முன்வைக்கப்பட்டது.
2022 வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை திட்ட தயாரிப்புக்கான நிதி, நூறு விகித அதிகரிப்பாகும். இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் போது, சுயேட்சை குழு உறுப்பினர் மூவரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவரும், சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர், சபைக்கு சமூகமளிக்காத நிலையில், உப தவிசாளர், வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிய, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வழிமொழிந்தார்.
அதனால், வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன், உறுப்பினர்கள் அனைவரும், யுத்தத்தால் மரணித்த எமது உறவுகளுக்கு, மாவீரர் வாரத்தை முன்னிட்டு, சுடரேற்றி அஞ்சல் செலுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment