உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு, தொற்றா நோய் பிரிவு, விசேட வைத்திய நிபுணர்கள், இலங்கை நீரிழிவு சம்மேளனம் என்பன இணைந்து இந்த பேரணியை முன்னெடுத்தன.
நீரிழிவு நோய்: தெரிந்துக்கொண்டு பாதுகாப்புப் பெறுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் உறுப்பினர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இந்த பேரிணயானது கொழும்பு விகாராமாதேவி பூங்கா வரை சென்றது. விகாரமாதேவி பூங்காவில் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதன்போது கருத்துரைத்த இலங்கை நீரிழிவு சம்ளேமனத்தின் தலைவர் வைத்தியர் துலானி கோட்டஹச்சி,
நீரழிவு நோய்: தெரிந்துக்கொண்டு பாதுகாப்புப் பெறுவோம் என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக நீரிழிவு தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 10, 12 சதவீமதானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தரப்பினராக உள்ளனர்.
நகர பகுதிகளில் நூற்றுக்கு 20 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தரப்பினராக உள்ளனர்.
இது உண்மையில் பயங்கரமான நிலைமையாகும். அதேபோன்று கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் என்பது மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
நூற்றில் 10 சதவீதமான கர்ப்பிணிகளும் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நீரிழிவு நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியது அவசியமாகும்.
அதற்கான எடுக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment