சாணக்கிய தொழிற்சங்கவாதியை மலையகம் இழந்து விட்டதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘1994ம் ஆண்டு காலப்பகுதியில் இருளில் இருந்த மலையகத்திற்கு தன்னுடைய அமைச்சின் ஊடாக மின்சாரத்தை பெற்று ஒளி தந்தவர் அமரர் முத்துசிவலிங்கம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவரென சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா போற்றப்பட்டதன் பின் தற்போது மூத்த தலைவர் என்ற வரிசையில் முத்து சிவலிங்கம் ஐயாவும் இணைவார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் பல தசாப்த காலமாக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்து இந்த மாபெரும் அமைப்பின் தலைவராகவும், போசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலையக மக்களின் பிரதி அமைச்சராகவும், பதவி வகித்து எம்மை வழிநடத்திய இந்த மூத்த தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் எனது தந்தை அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வழிகாட்டியாக இருந்த இவர். இவர்களின் மறைவுக்கு பின் என்னையும் வழிநடத்தினார் என்பதை மறந்துவிட முடியாது. அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment