போர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தில் இருந்து உடன் அமுலாகும் வகையில் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் வெளியேற்றம் இரு தரப்பு இணக்கத்துடன் இடம்பெற்றதாக, இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். 37 வயதான ரொனால்டோ, மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக, 2021 ஆம் ஆண்டு முதல், 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அந்த ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்னதாகவே, அவர் கழகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்காக, 346 போட்டிகளில், 145 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார். மென்செஸ்டர் யுனைட்டட் கழக முகாமையாளருடன் ஏற்பட்ட முறுகல் நிலையே, ரொனால்டோவின் இந்த முடிவுக்கு காரணமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்திலிருந்து வெளியேறிய போதும், ரசிகர்களுடனான தமது உறவு தொடரும் என ரொனால்டோ கூறியுள்ளார். அதேநேரம், ரொனால்டோவின் பங்களிப்புக்கு மென்செஸ்டர் யுனைட்டட் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment