இலங்கைத் துறைமுக அதிகார சபை மற்றும் கொழும்புத் துறைமுகத்தில் இலங்கையின் மிகப்பெரிய மின்சாரக் கட்டணம் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபைத் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கை துறைமுக அதிகாரசபை என்ற பெயரில் நான்கு கணக்குகளின் கீழ் மின்சாரம் வழங்கப்படுவதுடன், மாதாந்தம் ஏறக்குறைய எழுபது மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் பதிவு செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் தருபஹாவில் உள்ள சொகுசு விடுதியில் இரண்டாவது அதிக மின்சாரக் கட்டணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழமையாக மாதாந்தம் முப்பது மில்லியன் ரூபாவை நெருங்குவதாக கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையம் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த இடத்துக்கு மாதந்தோறும் 15 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment