வன்னி கலை பண்டபாட்டுக் கூடமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் மாவீரர் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப்பெருவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் முதல் நிகழ்வாக பிராசாந்தினி நர்த்தன நாட்டியாலயத்தினரால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து அடக்காப்பற்றும் தமிழர் வரலாறும் சிறப்புரை, கரகாட்டம், சிவத்தாண்டவம், பண்டார வன்னியன் சிறப்புரை, வில்லிசை, கவியரங்கம், இசை நிகழ்ச்சி, தனிநபர் நடிப்பு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலைஞர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment