எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருகின்றது.
கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே பல தரப்புக்கள் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல தரமான மற்றும் முற்போக்கான தலைவர்கள் இருப்பதாக கூறினார்.
அரசாங்கத்தை அமைக்கும் அடுத்த கூட்டணியை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கும் என முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது, எனவே தேர்தலில் வெற்றிபெற தலைவர்களும் கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment