அம்பலாங்கொடை பகுதியில் பெற்றோர் தமது குழந்தைகளை கைவிட்டுச் சென்ற சம்பவம் பதிவு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

அம்பலாங்கொடை பகுதியில் பெற்றோர் தமது குழந்தைகளை கைவிட்டுச் சென்ற சம்பவம் பதிவு

பெற்றோர் தமது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது. 


இது குறித்து அறிந்த அயலவர்கள் அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 


அதன்படி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். 2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர். 


தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here