ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளால் மரநடுகை நிகழ்வும் கூட்டமும் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ரஜனிகாந் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வசந்தராஜா மற்றும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட நிருவாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சூழலுக்கு நன்மைதரும் நிழல் மரங்களும் நடப்பட்டதுடன் தொடர்ந்து மன்றேசாவில் கூட்டமும் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும்,
அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இன மத மொழிகளைக் கடந்து இங்குள்ள அனைத்து மக்களுக்கும் தமது அமைப்பு தொடர்ந்தும் அற்பணிப்புடன் பணியாற்றும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ரஜனிகாந் தெரிவித்தார்.
No comments:
Post a Comment