யாழ். மட்டுவில் பொருளாதார மத்திய நிலைய நிர்மாணம் தொடர்பில் கள ஆய்வு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 3 November 2022

யாழ். மட்டுவில் பொருளாதார மத்திய நிலைய நிர்மாணம் தொடர்பில் கள ஆய்வு

 யாழ். மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமான பணிகள் நிறைவு செய்து ஆரம்பிப்பது  தொடர்பில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேரில் கள ஆய்வு யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்கள் இன்று பார்வையிட்டனர்.


சுமார் 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களும் நன்மையளிக்கும் வகையில் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.


இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கடற்றொழில் அமைச்சின் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிகள் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தினர்.






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here