காலி ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துட்டுகெமுனு மஹா வித்தியாலயத்தில், தரம் 05இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அங்குனுபெலஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பாடசாலையைச் சேர்நத 49 வயது ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த 10 வயது மாணவி தங்கல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment