டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை படுகொலை செய்து தப்பி ஓடியுள்ளார். டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது வீட்டில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என நான்கு பேர் பரிதாபமான நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவத்தை பார்வையிட்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் இது குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை பரிசோதனை செய்தபோது குளியலறையில் இரண்டு பேர் மற்றும் வீட்டின் தரைப்பகுதியில் ஒரு பெண் வீட்டின் சமையலறையில் ஒருவர் உட்பட நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.
பொலிஸ் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த கேசவ் என்ற வாலிபர் தனது தந்தை தினேஷ் இதாய் தர்ஷனா மற்றும் பாட்டி தேவனா தேவி தனது ஒரே தங்கையான ஊர்வசி சைனி ஆகியோரை கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். கொலையாளி கேசவ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வரும் என்றும் இதையடுத்து அவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார், அங்கிருந்து சில தினங்களுக்கு முன்பே வீடு திரும்பினார், மற்றும் நேற்று இரவு மறுபடியும் குடும்பத்துடன் தகராறு மேற்கொண்டார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட கேசவ் குடிபோதையில் இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பணம் கேட்டதாகவும் அவர்கள் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த வாலிபர் தனது தந்தை, தாய் உட்பட நான்கு பேரையும் குத்தி கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவருகிறது. இதற்கிடையே கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கேசவை அப்பகுதி பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பாலம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment