இராசமாணிக்கம் சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினையும் ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் தொடர்ந்து வசை பாடுவதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வரவுசெலவு திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் என்று அனைவராலும் போற்றப்படுகின்ற போதும் நாட்டின் பொருளாதாரத்தை முதலில் கட்டியெழுப்பவேண்டியதன் காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாட்டினை கட்டியெழுப்பும் வரவுசெலவு திட்டமாக பார்ப்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினையும் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் வசைபாடுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மக்கள் மத்தியிலும் ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஏற்பாட்டில் கட்சியின் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்தினை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment