நாடு முழுவதும் உள்ள சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிரமம் காணப்படுவதால் அவர்களுக்கு கடன் வசதியில் எரிவாயுவை வழங்குமாறு விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான விநியோகஸ்தர்கள் எரிவாயுவை கடனுக்கு வழங்குவதில்லை என்றும் பணம் கொடுத்தால் மாத்திரமே வழங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment