காணாமல் போன இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

காணாமல் போன இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!

 சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் காணாமல் போன மற்றைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


18 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் என தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த படகில் 8 பேர் பயணித்திருந்த நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர். ஏனைய மூன்று பேரும் காணாமல் போயிருந்த நிலையில் 10 வயதுடைய சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 


ஏனைய இரு சிறுமிகளையும் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


விபத்துக்கு உள்ளானவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வாவியின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here