ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் சொற்ப வேளையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதியன்று ஆரம்பமாகும் இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 8ஆம் திகதியன்று இடம்பெறும்.
இன்று (14) தாக்கல் செய்யப்படும் வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு, நாளை (15) ஆரம்பமாகும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களுக்காக, ஜனாதிபதியால் இடைக்கால வரவு- செலவுத்திட்டம் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டமாகும்.
No comments:
Post a Comment