உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யூரியா உரம் இறக்குமதி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 14 November 2022

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யூரியா உரம் இறக்குமதி!

 உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு 8 மணி முதல் உரத்தை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார். 


பெரும்போக நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குத் தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி 105 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கியது. 


அதன் கீழ், 13 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இதற்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here