துருக்கியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகலை 4.08 மணியளவில் இஸ்தான்புல் நகரிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவையில் நிறுவகம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் ஏற்பட்டததாக தகவல் எதுவும் இல்லை என துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment