வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 182 முறைப்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மோசடியான முறையில் அறவிடப்பட்ட 2 கோடியே 83 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணத் தொகையை முறைப்பாட்டாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் பணியகம் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 43 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment