மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 53 நாட்களாக காத்திருக்கின்றது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய வந்த கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்தக் கப்பலுக்காக 79 இலட்சம் டொலர்களுக்கு மேல் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிகாட்டியுள்ளது.
இந்தக் கப்பலானது செப்டம்பர் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment