எகிப்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பலி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

எகிப்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பலி!

 எகிப்து நாட்டின் தஹ்லியா மாகாணத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.


இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here