2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் என்பது, 2048 அதேபோன்று குறுகிய, நீண்டகால பொருளாதார தீர்வுக்கான வழிவகைளை மேற்கொள்ளும் வரவு செலவு திட்டம் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் சொற்ப வேளையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment