மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீ பரவியதில் அங்கிருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பஸ்யால கிரியுல்ல வீதியின் ஹிரிவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தினால் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment