ஜெருஸலேம் நகரில் இன்று நடந்த இரு குண்டுவெடிப்புகளில் ஒருவர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெருஸலேம் நகர பஸ்தரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெருஸலேம் நகருக்கு இஸ்ரேல்களும், பலஸ்தீனியர்களும் உரிமை கோரு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேற்குக் கரையின் நப்ளல் நகரில் 16 வயதான பலஸ்தீன சிறுவனொருவன், இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment