தாக்குதலுக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று காலை கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமி ஒருவரை அழைத்து வந்த நிலையில் வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
பின்னர் சிறுமியை அழைத்து வந்த நபர் சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வைத்தியசாலைக்கு வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி வெயங்கொடையில் வசிக்கும் குறித்த நபருடன் தானாக முன்வந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment