நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment