பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ் - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 22 October 2022

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ்

 பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.


குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.


மேலும் தெரிவிக்கையில்,


பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது.


இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்,


அதன் போது, பலாலி விமான நிலையத்தில் இருந்த தொழிநுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவை தெற்கில் உள்ள விமான நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன என கேட்ட போது,


அது முற்றிலும் தவறான தகவல். நான் பொய் சொல்ல வேண்டிய தேவை இல்லை. பலாலி விமான நிலையத்தில் இருந்து எதுவும் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.


இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here