வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளை நீதிமன்றத்திற்கு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு மையம் ஒன்றினை வட பகுதியில் உருவாக்குதல் போன்றவற்றின் அவசியம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், குறித்த கருத்தினை ஏனைய அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில், பிரதமர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போணோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி தொடர்பான பிணக்குகள் உட்பட வடக்கு கிழக்கு பகுதி மக்களினால் அடையாளப்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பரிகாரம் வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment