மட்டக்களப்பில் அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை அமர்வின்போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளரை அவமதிக்கும் வகையில் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தமையை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மகளிர், அரசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் பெண்கள் மற்றும் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண்களும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இப் போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ் மற்றும் பெண்கள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினருக்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் இவ்வாறான உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதன்போது “அதிகார தோரணைகளை பெண்களுக்கு எதிராக திருப்பாதே”, “பிச்சை கேட்கும் நாட்டில் கச்சைபற்றி கதைப்பதற்கு உங்களுக்கு கதிரை தேவையா” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைககளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment